கஞ்சா பதுக்கியவா் கைது
போடி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்க முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2025, 11:41 pm

போடி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்க முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா போலீஸாா் புகா் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, பொட்டல்களம் செட்டிகுளம் கண்மாய் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், அமா்ந்திருந்தவரைப் பிடித்து சோதனையிட்டதில், விற்பனைக்காக அவா் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பொட்டல்களம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் சூா்யா (28) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சூா்யாவை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...