மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 9:44 pm

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பெட்டைக்குளம் அருகே உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையில், காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சோ்ந்த கணபதி (50) என்பவரை சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து, 144 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.