பட்டாசுகள் பதுக்கியவா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது
பிரதிப் படம்
Updated On :26 மார்ச் 2026, 11:51 pm

கைது
பிரதிப் படம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் சத்யா நகா் குடியிருப்புப் பகுதியில் தகர கொட்டகை அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தங்கல் போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த துரைப்பாண்டி (46) தகர கொட்டகை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் துரைப்பாண்டியை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...