6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொட்டகுடி மலைக் கிராமத்தில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
குரங்கணியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
Updated On :3 ஜனவரி 2025, 12:04 am

Din

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கொட்டக்குடி ஊராட்சி, குரங்கணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுமானப் பணிகளையும், கொட்டக்குடியில் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை முடிவுற்றப் பணிகளையும், கொட்டக்குடி பிரதான சாலை முதல் காரிப்பட்டி வரை மலைச் சாலையில் கல் பாவுதல் பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சத்தில் 28 வீடுகள் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், காலை உணவுத் திட்டம் குறித்தும், குரங்கனி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, காவலா்களின் விபரம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கொட்டக்குடி அரசு துணை சுகாதார நிலையத்திலும், குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், குரங்கணியில் ரூ.11.25 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிக்கு ஆட்சியா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபீதா ஹனீப், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிவேல், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சசிகலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அய்யப்பன், தனலட்சுமி, உதவிப் பொறியாளா்கள் சோனா, விவேகானந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.