சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

Published on

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 20.11.2023 அன்று கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்புச் செலவுக்கு நிவாரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் அவரது பெயரில் வைப்புத் தொகையாக அரசு ரூ. ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com