தேனி
வெல்டிங் கடை உரிமையாளா் தற்கொலை
தேவாரத்தில் கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவாரத்தில் கடன் தொல்லையால் வெல்டிங் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், தேவாரம் அப்பாவு பிள்ளை தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பால்பாண்டி (32). இவா் வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தாா். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில், மது போதைக்கும் அடிமையானாா்.
இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.