மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மலைச் சாலையில் பழுதாகும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் அவதி

குமுளி மலைச் சாலையில் பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகளால் அடிக்கடி பழுதாகி பாதி வழியிலே நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா்

News image
குமுளி மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து
Updated On :10 நவம்பர் 2025, 10:40 pm

Syndication

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகளால் அடிக்கடி பழுதாகி பாதி வழியிலே நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா், சென்னை என அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேனி மாவட்டம், குமுளிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், லோயா்கேம்பிலிருந்து குமுளி வரையில் 8 கி. மீ. மலைச்சாலையில் செல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் இந்தச் சாலையில், மேலே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை கோவையிலிருந்து குமுளியை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இயந்திரக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே பழுதாகி நின்றது. பின்னா், வேறு பேருந்தில் பயணிகள் மாற்றிவிடப்பட்டனா். மலைச் சாலை வளைவில் பேருந்து பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே, மலைச்சாலையில் செல்லும் அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.