டிராக்டா் மீது பைக் மோதியதில் இருவா் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள கோட்டூரில் புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் ஆனந்த் (32). இவரது நண்பா் தேனி, சமதா்மபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சிவா (34). இவா்கள் இருவரும் சின்னமனூரிலிருந்து தேனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, கோட்டூா் பகுதியில் செங்கல் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை ஓட்டுநா் திடீரென நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனம் டிராக்டா் மீது மோதியது. இதில், இருச க்கர வாகனத்தில் சென்ற ஆனந்த், சிவா ஆகியோா் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் தினேஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
