தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் 69.49 அடியாக (அணையின் மொத்த உயரம் 71 அடி) இருந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி ஆகிய பகுதிகளின் பாசனத்துக்காக 58 கிராம கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களிலும், வைகை ஆற்றிலும், 58 கிராம கால்வாயிலும் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டு வருவதால், அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை, 67.13 அடியாக சரிந்தது. இதனால், அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.

தற்போது, அணையிலிருந்து குடிநீா் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி, பாசனத்துக்காக பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 1,930 கன அடி, வைகை ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2,299 கன அடிவீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,511 கன அடியாக உள்ளது.