மகளிா் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு

Published on

தேனி மாவட்டம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கிக்கு கல்லூரி முதல்வா் ரேணுகா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக சிவகாசி தனியாா் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சிவகுமாா் கலந்து கொண்டு, எண்ம கற்றலுக்கான உள்ளடக்கம், கைப்பேசி செயலி மேம்பாட்டுக்கான அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்கினாா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com