தேனி
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ரௌடி கைது
போடியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
போடி புதூரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி முருகேஸ்வரி (33). கணவா் இறந்துவிட்ட நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசிக்கும் அருண்பாண்டியன் (38), முருகேஸ்வரியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
முருகேஸ்வரியின் சப்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்தனா். அப்போது, அருண்பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டாா்.இதுகுறித்து முருகேஸ்வரி போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியனைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
