புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை சங்கரமூா்த்திபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள சாவடி தெருவில் பரமசிவம் (45) என்பவரது கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா் வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல, முதலக்கம்பட்டி உதயக்குமாா் (36) கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, 20 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com