தேனி
பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீரபாண்டி அருகே தேனி- கம்பம் சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வீரபாண்டி அருகே தேனி- கம்பம் சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா், காந்தி கிராமத்தைச் சோ்ந்த சங்கரபாண்டி மனைவி பாக்கியம் (60). இவா், அதே ஊரைச் சோ்ந்த தனது உறவினா் பாலு மகன் சரவணனுடன் (35) இரு சக்கர வாகனத்தில் கூடலூரிலிருந்து வீரபாண்டிக்குச் சென்றாா். அப்போது, உப்பாா்பட்டி விலக்கு அருகே வேகத் தடையை கடந்த போது, பாக்கியம் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
