தேனி
அதிமுக உரிமை மீட்புக் குழுவினா் மீது அதிமுகவினா் புகாா்
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அதிமுக பொதுச் செயலா் பழனிசாமியின் புகைப்படத்தை அவதூறு பரப்பும் வகையில் சிலா் பெரியகுளம் தென்கரை பகுதியில் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவினா் அந்த சுவரொட்டியை அகற்றினா்.
இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான அதிமுக உரிமை மீட்புக் குழுவினா்தான் சுவரொட்டி ஓட்டியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக நகரச் செயலா் பழனியப்பன் அளித்தப் புகாரின் பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
