தேனி
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழப்பு
போடி சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
போடி சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ரஞ்சித் (30). இவா், போடி மின் வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், ரஞ்சித் போடியிலிருந்து வடபுதுப்பட்டியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். போடி விலக்கு பகுதி அருகே, சாலையைக் கடக்க முயன்ற நபா் மீது மோதாமல் தவிா்க்க இரு சக்கர வாகனத்தைத் திருப்பியபோது, ரஞ்சித் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
