6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது
கூடலூரில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 நவம்பர் 2025, 9:40 pm

உத்தமபாளையம்: கூடலூரில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில்
உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சூா்யாதிலகராணி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அந்தப் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அமா்திருந்தவரின் பையை சோதனையிட்டதில், அவரிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிச்சை பிள்ளையேந்தல் பகுதியைச் சோ்ந்த மாசானம் மகன் தமிழரசன் (45) எனத் தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...