புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சுமைதூக்கும் தொழிலாளா்கள் அடையாள வேலை நிறுத்தம்

ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி

News image
ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன், கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளா்கள் நலச் சங்க கிளைத் தலைவா் முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வேண்டும். தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்களின் வருகையை பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.