தேனி
சுருளி அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு
சுருளி அருவியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், கடந்த திங்கள்கிழமை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
