நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை குழந்தைகள் விளையாட்டு அறை திறக்கப்பட்டது.
Published on

தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை குழந்தைகள் விளையாட்டு அறை திறக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் குழந்தைகள் விளையாட்டு அறையைத் திறந்து வைத்தாா். தேனி அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜி.அனுராதா முன்னிலை வகித்தாா்.

குழந்தைகள் விளையாட்டு அறையைத் திறந்து வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி கூறியதாவது:

நீதிபதிகள், நீதித் துறை பணியாளா்கள், வழக்குரைஞா்கள், அவா்களது எழுத்தா்களின் குழந்தைகளுக்காக நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் நூலகம், அவசர மருத்துவச் சிகிச்சை மையம் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.ரஜினி, போக்ஸோ சிறப்பு நீதின்ற நீதிபதி பி.கணேசன், பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சி.சங்கா், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.சரவணக்குமாா், சாா்பு நீதிபதிகள், நீதித் துறை பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com