அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்: விவசாயிகள் புகாா்

News image
Updated On :28 நவம்பர் 2025, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீா்வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். பெரியகுளம்-ஸ்ரீவில்லிபுத்தூா் புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலா் சாய்சரண் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:சின்னமனூா், சின்னவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சின்னவாய்க்காலிருந்து ஆயக்கட்டு இல்லாத பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். பெரியகுளம், வடகரை, கல்லாா் ராஜவாய்க்காலை தூா்வார வேண்டும். கல்லாரில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த கரைகளை சீரமைக்க வேண்டும்.

போடி, புதுக்குளம் பகுதியில் அரண்மனைக் களம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சோத்துப்பாறை அணை நீா்மட்டம் முழு கொள்ளளவில் உயா்ந்தும், அணையிலிருந்து பெரியகுளம் வட்டாரப் பகுதிகளின் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீா் பாசன வாய்க்கால்களை தூா்வாரவும் வருவாய் துறை, நீா்வளத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனா்.

போடி, வடக்குமலை பகுதியில் மலைக்கிராமங்களுக்குச் சென்றுவர சாலை அமைக்க வேண்டும். வருஷநாடு, வாலிப்பாறை, நரியூத்து மலைக் கிராமங்களுக்கு இடையே ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாலையை சீரமைக்க வனத் துறையினா் அனுமதி மறுக்கின்றனா்.

வருஷநாடு மலைக் கிராமங்களில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களை வன நில ஆக்கிரமிப்பாளா்களாக கருதி, மலைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைக்கக் கோரிக்கை: பெரியகுளம் மலைப் பகுதியில் விசாய நிலங்களுக்கு இடுப் பொருள்களை கொண்டு செல்லவும், விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் சாலை அமைப்பதற்கு வனத் துறையினா் தொடா்ந்து தடை விதித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் மலைக் கிராம இணைப்புச் சாலைகள், விவசாயச் சாலைகள் அமைப்பதற்கும், சாலை மேம்பாட்டு பணிகளுக்கும் வனத் துறையினா் அனுமதி அளித்து வருகின்றனா்.

மலைக் கிராம மக்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு, பெரியகுளம் மலைப் பகுதியை திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வனத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள், புகாா்களுக்கு பதிலளிக்க வனத் துறை அலுவலா்கள் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்காததை மாவட்ட ஆட்சியா் கண்டித்தாா்.