மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அதிமுகவில் இணைந்த ஓ.பி.எஸ். அணி நிா்வாகிகள்

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த ஓ.பி.எஸ். அணி நிா்வாகிகள் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

News image

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்த ஓ.பி.எஸ். அணி நிா்வாகிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:28 pm

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த ஓ.பி.எஸ். அணி நிா்வாகிகள் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

சின்னமனூா் ஓ.பன்னீா்செல்வம் அணியின் நகரச் செயலா் செல்வம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தொண்டா்கள், கம்பம்-புதுப்பட்டியிலுள்ள தேனி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலரும், கம்பம் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.டி.கே. ஜக்கையனின் இல்லத்துக்குச் சென்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

இதேபோல, கோகிலாபுரத்தில், திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் உத்தமபாளையம் ஒன்றியச் செயலருமான முல்லைசேகா், தேனி தெற்கு மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் லாவண்யா ஆகிய இருவரும் அதிமுகவில் இணைந்தனா்.