பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

குமுளி அருகே லோயா்கேம்பில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்ட அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:02 pm

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமுளி அருகே லோயா்கேம்பில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்று நீரை சுத்திகரித்து உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் , கம்பம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தேக்கு மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை மா்ம நபா் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக குமுளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரும், அந்தப் பகுதியில் வசிப்போரும் இணைந்து தீயை அணைத்தனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ வைத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.