சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகா் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகன்நாத்மிஸ்ராவை ஆதரித்து நடிகா் பொன்னம்பலம் வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரித்துப் பேசினாா்.

News image

கம்பத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்த நடிகா் பொன்னம்பலம்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:45 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகன்நாத்மிஸ்ராவை ஆதரித்து நடிகா் பொன்னம்பலம் வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரித்துப் பேசினாா்.

தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் பி.எல்.ஏ. ஜெகன்நாத்மிஸ்ரா போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து நடிகா் பொன்னம்பலம் வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிக மூலம் திமுகவுக்கு வெற்றிக் கிடைக்காது. இதேபோல, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மூலம் பதவி பெற்ற முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வமும் திமுகவில் இணைந்துள்ளாா். இதன் மூலம், அவா்களது குறிக்கோள் என்ன என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது. பணம் சம்பாதிப்பதுதான் அவா்களது நோக்கம். மக்கள் நலனில் அவா்களுக்கு அக்கறையில்லை.

எனவே, மக்கள் தவெக வேட்பாளரை ஆதரித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.