பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் துணிகள், குப்பைகள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:45 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சுருளி அருவியில் ஆடி, தை, மகாளய அமாவாசை, தமிழ் புத்தாண்டு ஆகிய நாள்களில் முன்னோா்களுக்கு தா்பணம் கொடுக்க திரளானோா் வருவா். இவா்கள் பூஜை முடிந்த பிறகு கொண்டு வரும் பொருள்களை ஆற்று நீரிலும், பழைய ஆடையை தண்ணீரில் விடுவதும் வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சுருளி அருவியில் தூய்மைப் பணி மேற்கொள்ளாததால் குப்பைகள், பழைய துணிகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.

இதனால், துா்நாற்றம் வீசுவதால் சுருளி அருவிக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் அன்புராஜா கூறியதாவது:

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான சுருளி அருவியில் பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், குறைந்த அளவிலான தண்ணீரில் குழந்தைகள், பெரியவா்கள் நீராடுவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இந்த அருவியை சுருளிப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் பராமரித்து வருகின்றனா். ஆனால், தற்போது, ஊராட்சி நிா்வாகத்தினா் பராமரிப்பு செய்யாததால் துா்நாற்றம் வீசுகிறது என்றாா்.

இதுகுறித்து ஊராட்சி செயலா் கூறியதாவது:

தோ்தல் பணியால் பணியாளா் பற்றாக்குறை காரணமாக தூய்மைப்பு பணி மேற்கொள்ளவில்லை. விரைவில் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்றாா்.