ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:18 am IST

தேனியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அரண்மனைப் புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (68). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், 4 வயதுள்ள பேரனை திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றாராம்.

அப்போது, தேனி - மதுரை பங்களா மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.