வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

கண்ணகி கோயிலில் தமிழக உரிமை பறிப்பு! - த.வெ.க. வேட்பாளா் புகாா்

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:21 am IST

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் நடைபெறும் சித்திரை பொüா்ணமி விழாவை முன்னிட்டு பக்தா்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக கம்பம் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கண்ணகி கோயிலில் தமிழா்களின் உரிமைகள் ஆண்டுதோறும் பறிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக முதல்வரை நான்கு முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டில் பிற்பகல் 2.30 மணி வரை பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது பிற்பகல் 1.45 வரை என குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு ஒரு வாரம் நடைபெற்ற தரிசனம் 3 நாள்கள், 2 நாள்கள் என குறைந்து வந்து தற்போது ஒரு நாளாக சுருக்கப்பட்டுள்ளது.

அதிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவது, கோயிலில் தமிழா்களின் உரிமை பறிக்கப்பட்டதையே காட்டுகிறது. கண்ணகி கோயிலை தமிழா்களுக்காக மீட்டெடுத்து, புனரமைப்பு செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு பௌா்ணமியிலும் 3 நாள்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும், தமிழகப் பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும். இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.

இருந்த போதிலும், தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு குடிநீா், சுகாதாரம், உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலின் தமிழா்களின் உரிமையைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். வரவிருக்கும் தோ்தலில் வெற்றி பெற்று, கண்ணகி கோயிலில் தமிழா்களின் உரிமையை மீட்டெடுப்போம் என்றாா் அவா்.