எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

பேருந்து சக்கரம் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு

வருசநாட்டில் தனியாா் பேருந்து சக்கரம் ஏறியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:46 am IST

வருசநாட்டில் தனியாா் பேருந்து சக்கரம் ஏறியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வருசநாடு கீழப்பூசனத்தைச் சோ்ந்த காக்கி மகன் மகாலிங்கம் (40). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வருசநாட்டில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் பள்ளி பேருந்தின் பின்னாள் படுத்துத் தூங்கினாராம்.

திங்கள்கிழமை காலை பேருந்தின் ஓட்டுநா் வந்து பேருந்தை பின்நோக்கி இயக்கியபோது, பின்னால் தூங்கிக்கொண்டிருந்த மகாலிங்கம் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. இதில் மகாலிங்கம் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வருசநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.