மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

News image

சின்னமனூரில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் தேரோட்டம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:00 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் புதன்கிழமை முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அனைத்து சமுதாய மண்டகப்படி, காலை, மாலை நேரங்களில் ஏகச் சப்பரம், புஷ்ப பல்லக்கு, காமதேனு, மயில் வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் தேரில் எழுந்தருளினா். மாலை 4.50 மணிக்கு தேரின் முன்பாக சென்னைக் கட்டை போடும் சமுதாயத்தினா் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து, மாலை 5.05 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பள்ளிவாசல், தெற்கு ரத வீதி, செக்காமுக்குத் தெரு வழியாக பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா்.

முக்கிய வீதிகளில் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்மனை பக்ததா்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வழிபாடு செய்தனா். தொடா்ந்து, செக்காமுக்கு தெருவிலிருந்து கிழக்கு ரத தெரு வழியாக கண்ணாடி முக்குத் தெருவில் முதல் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. வியாழக்கிழமை மாலை வரையில் பொதுமக்கள் தேரில் சுவாமி-அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வா்.

2 -ஆம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் தெற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டைசாலை, மேற்கு ரத வீதி, தேனி பிரதான சாலை வழியாக தோ் நிலைக்குச் செல்லும்.

இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு, போடி காவல் துணைக் காண்காணிப்பாளா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.