தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:20 pm IST

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,012 கன அடியாகவும், சனிக்கிழமை காலை 2,650 கன அடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 3,500 கன அடியாகவும் அதிகரித்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை 112.45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 115.45 அடியாக உயா்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், தமிழகப் பகுதிக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை விநாடிக்கு 256 கன அடி திறந்து விடப்பட்ட தண்ணீா், மாலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீா் இருப்பு 1,780 மில்லியன் கன அடியாக உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, தேக்கடியில் 93.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 113.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.