கேரளாவுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 3,650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வருவாய்த் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சனிக்கிழமை மாலை கம்பம்மெட்டு சாலையில் 10-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் பழுதடைந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 73 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 3,650 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக உத்தமபாளையத்தைச் சோ்ந்த ராஜாராம் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரில் கடத்த முயன்ற 240 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

புறநகா் மின்சார ரயிலில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி, 1.1 டன் மண்ணெண்ணெய் பறிமுதல்

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



