தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் தென்னை மட்டை விழுந்து டிராக்டா் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் செல்வம் (50). டிராக்டா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இயற்கை உரங்களை ஏற்றிக்கொண்டு வந்து, அந்தப் பகுதியில் உள்ள தென்னந் தோப்பில் கொட்டினாா்.
அப்போது, மரத்திலிருந்து தென்னை மட்டை அவா் மீது விழுந்தது. இதனால் காயமடைந்த அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடமலைக்குண்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

மின்சாரம் பாய்ந்து டிராக்டா் ஓட்டுநா் உயிரிழப்பு
டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


