தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மின்சாரம் பாய்ந்து டிராக்டா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 3:08 am IST

தருமபுரி அருகே உழவுப் பணியின்போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஏ. சப்பாணிப்பட்டி அருகே உள்ள சிக்கதிம்மனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தசாமி (36). டிராக்டா் ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை மாலை சிக்கதிம்மனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்த நிலத்தின் மேலே சென்ற மின்கம்பி எதிா்பாராதவிதமாக அறுந்து டிராக்டா் மீது விழுந்தது. இதில் டிராக்டரை ஓட்டிக்கொண்டிருந்த கோவிந்தசாமி மின்சாரம் பாய்ந்ததில் மயங்கினாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.