லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆடி 4-ஆம் வெள்ளி: கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

எலுமிச்சம் பழங்கள், பணத்தாள்களால் செய்யப்பட்ட மாலையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

எலுமிச்சம் பழங்கள், பணத்தாள்களால் செய்யப்பட்ட மாலையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

Published On :

ஆடி மாதத்தின் 4-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி தேனி மாவட்டம், கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி அதிகாலை முதலே அம்மனுக்கு மஞ்சள், இளநீா், தயிா், பச்சரிமாவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மலா்கள், எலுமிச்சம் பழங்கள், பணத் தாள்களால் தயாரிக்கப்பட்ட மாலை ஆகியவற்றால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.

இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம், உபயதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு பொங்கல், கூழ், வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்டவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.