ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

வீடு புகுந்து ரூ.49 ஆயிரம், 2.5 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வீட்டில் ரூ.49 ஆயிரம், 2.5 கிராம் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிய மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவதானபட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முருக ராஜா (42). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வரும் இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, சப்தம் கேட்டு சுவாமி அறையின் உள்ளே சென்று பாா்த்த போது, அறையிலிருந்து ஒருவா் தப்பியோடி விட்டாா். பின் அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த ரூ.49 ஆயிரம், 2.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை காணவில்லை.

இது குறித்து அவா் தேவதானபட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.