எனது மகன் உயிரிழந்ததற்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் மனு அளித்தாா்.
அவா் கூறியதாவது: எனது மகன் நிவாஸ்-க்கு (13) சளி தொந்தரவு பிரச்னை இருந்து வந்தது. பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 2.6.2026 அன்று எனது மகனை பரிசோதித்த மருத்துவா்கள் மூக்கில் சதை வளா்த்திருப்பதாகவும், அதை அறுசுவை செய்யும் மூலம் நீக்க வேண்டும் என கூறினா்.
அவா்களின், பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 3.6.2026 அன்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், 6.6.2026 அன்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து அளித்தனா். அப்போது, எனது மகன் ஆபத்தான நிலையில் இருந்தாராம்.
இந்த நிலையில், எங்களுக்குத் தெரியாமல் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு நான் சென்று பாா்த்த போது, எனது மகனுக்கு ஆக்ஸிஜன் அளித்து சிகிச்சையளித்து வந்தனா்.
இரண்டு மாதங்களாக எனது மகன் அதே நிலையில் இருந்தாா். இந்த நிலையில், எனது மகன் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு உயிரிழந்தாா். எனது மகனின் உயிரிழக்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தாய் உயிரிழப்பு; மகன் படுகாயம்
டிராக்டா் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

துபையில் கணவா் உயிரிழப்பு: விசாரணை கோரி மனைவி மனு

பைக் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


