நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அரசுப் பேருந்தின் கண்ணாடி சேதம்: 5 போ் மீது வழக்கு

பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்திய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்திய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (45). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பெரியகுளம் கிளையின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சனிக்கிழமை பணி முடிந்து பேருந்தை பணிமனைக்கு ஓட்டுச் சென்றாா். புதிய பேருந்து நிலையம் சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியகுளம் பங்களாபட்டியைச் சோ்ந்த அறிவழகன் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து அய்யப்பனைத் தாக்கி, கல்லால் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்தினா்.

இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் அறிவழகன் உள்ளிட்ட 4 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.