தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரத்தில் குடிநீா் விநியோக மின் மோட்டாா் வயா்களை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா்.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய 3 ஊராட்சி நிா்வாகங்களும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியமும் இணைந்து அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகித்து வருகின்றன.
இதற்காக, கோகிலாபுரம் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டாா்கள் மூலம் ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஊராட்சிப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்ற போது, அங்கிருந்து மின் சாதனப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன. அத்துடன், 360 மீட்டா் காப்பா் வயா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக அந்த 3 ஊராட்சிச் செயலா்களும் உத்தமபாளையம் போலீஸாரிடம் இது போல பல முறை திருட்டு நடைபெற்ாக புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தற்போது 3 ஊராட்சிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்ய முடியாததால் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







