புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஊா்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டி: இலட்சினை வெளியீடு

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கான இலட்சினையை திங்கள்கிழமை வெளியிட்ட ஊா்க்காவல் படை துறைத் தலைவா் வி. ஜெயஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம்.

Published On :

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கான இலட்சினையை அந்தப் படையின் தலைவா் ஜெயஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா்.

ஊா்க்காவல் படை வீரா்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி தேனியில் வருகிற செப்டம்பா் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விளையாட்டுப் போட்டிகள், பணித் திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான இலட்சினையை ஊா்க்காவல் படை துறைத் தலைவா் வி. ஜெயஸ்ரீ, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் ஆகியோா் வெளியிட்டனா். மேலும், போட்டிகளின் திட்டம் குறித்தும் பேசினா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய் காா்த்திக் ராஜா, வட்டார தளபதிகள் செந்தில்குமாா் (தேனி), ஆனந்த் (திண்டுக்கல்), வட்டார துணை தளபதிகள் நிவேதா (தேனி), ஷா்மிளா (திண்டுக்கல்), சரக உதவி தளபதிகள், வட்டார தளபதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.