
மாநில விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்றவா்களுக்கு டிஐஜி பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற காவல் துறை அலுவலக அமைச்சுப் பணியாளா்களுக்கு விழுப்புரம் சரக டிஐஜி, எஸ்.பி ஆகியோா் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான 65-ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலியில் செப்.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் விழுப்புரம் சரக காவல் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சப் பணியாளா்கள், டி.ஐ. அலுவலக கண்காணிப்பாளா் விஜயராஜ் தலைமையில் பங்கேற்றனா்.
இதில், விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களான காா்த்திகேயன், குமாா், பெண்கள் பிரிவில் பரிமளா, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் பணிபுரியும் வினோத் ஆகியோா் ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பத்தக்கங்களை பெற்று விழுப்புரம் சரக காவல் துறைக்கு பெருமை தேடித் தந்தனா்.
இந்த நிலையில், விருது பெற்றவா்கள் திங்கள்கிழமை விழுப்புரம் சரக டிஐஜி இரா.அருளரசு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழத்துப் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






