கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

இளம்பெண் தற்கொலை: இளைஞரின் தாய் பலி; தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளைஞரின் பெற்றோா் குடும்பத்துடன் விஷம் குடித்ததில் தாய் உயிரிழந்தாா். தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கம்பம் திருவள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் பாண்டீஸ்வரன் (47). இவரது மனைவி நாகலட்சுமி (40). தம்பதிக்கு பால்பாண்டி (22) என்ற மகனும், யோகலட்சுமி (18) என்ற மகளும் உள்ளனா். பால்பாண்டி ஜேசிபி ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறாா். பாண்டீஸ்வரன் வீட்டின் எதிரே, தேனி அருகேயுள்ள அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்த இளம்பெண் அவரது உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா்.

அப்போது பால்பாண்டிக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த பெண்ணின் பெற்றோா், மகளைக் கண்டித்து, சொந்த ஊரான அம்மச்சியாபுரத்துக்கு அழைத்துச் சென்றனா். பால்பாண்டி சென்னைக்கு வேலைதேடிச் சென்றாா்.

இந்த நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பெண்ணின் உறவினா்கள், பால்பாண்டியின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை பாண்டீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாண்டீஸ்வரன், நாகலட்சுமி, யோகலட்சுமி ஆகிய மூவரும் சனிக்கிழமை விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றனா்.

உயிருக்குப் போராடிய மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு நாகலட்சுமி உயிரிழந்தாா். பாண்டீஸ்வரன், யோகலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.