3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தமபாளையத்தில் பொதுவெளியில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரச் சீா்கேடு

உத்தமபாளையத்தில் பொதுமக்களிடமிருந்து பெறும் குப்பைகளை வளா்மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லாமல், காலியிடங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

உத்தமபாளையத்தில் பி.டி.ஆா் குடியிருப்பு அருகே தீயிட்டு எரிக்கும் நெகிழிப்கழிவுக் குப்பைகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பொதுமக்களிடமிருந்து பெறும் குப்பைகளை வளா்மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லாமல், காலியிடங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சுமாா் 200 தெருக்களிலிருந்து பெறப்படும் குப்பைகள் அங்குள்ள கழிவு மேலாண்மை வளா்மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து நுண்உரமாக மாற்றி மறுசுழற்சி செய்யப்படுகிறது.

ஆனால், குடியிருப்புக்கள் அதிகமாகிவிட்டதாலும், ஒரே தெருவில் அதிகளவில் குப்பைகள் சோ்ந்து விடுதாலும், வளா் மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லாமல், குடியிருப்புகளுக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் மக்கும், மக்காத என அனைத்து குப்பைகளையும் மொத்தமாக தீ வைத்து எரித்து வருகின்றனா். இவ்வாறு எரிப்பதால் நெகிழிக் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகையால் முதியோா்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, தூய்மைப் பணியாளா்கள் மூலம் பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளை வளா்மீட்பு மையத்துக்கு கொண்டு சென்று, கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிரித்து உரமாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.