செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குப்பைகளை எரித்த போது ஆடையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

போடி அருகே வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை எரித்த போது, தீ ஆடையில் பிடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:22 pm

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை எரித்த போது, தீ ஆடையில் பிடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் திருப்பதி தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ரஞ்சிதா (33). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனால், மாமியாா் முத்துமணியுடன் ரஞ்சிதா வசித்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரஞ்சிதா தனது வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, தீ இவரது ஆடையில் பற்றி தீக்காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சிதா உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.