திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல் செய்தார்...

News image

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 5:08 am IST

போடி பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ‘திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தேனி மாவட்டம், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஓ.பன்னீா் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான தங்க. தமிழ்ச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கி.பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா். மொத்தம் 3 வேட்புமனுக்களை ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போடி தொகுதியில் ஏற்கெனவே 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். எனது தோ்தல் வாக்குறுதிகளில் 99.9 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளேன். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

எடப்பாடி பழனிசாமி நன்றியுணா்வு இல்லாதவா். அவா் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலா் இல்லை. இதுகுறித்து 6 வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்றாா் அவா்.