தேனி
முல்லைப் பெரியாற்றில் மூழ்கி மாயமானவரின் உடல் மீட்பு
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியிலுள்ள முல்லைப் பெரியாற்றியில் மூழ்கி மாயமான கூலித் தொழிலாளியின் உடல் 4 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் அண்மையில் சங்கா் (50), இவரது மனைவி கணேஷ்வரி (46) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினா். இதையடுத்து, கணேஷ்வரியை புதன்கிழமை சடலமாக தீயணைப்பு மீட்புக் குழுவினா் மீட்டனா்.
இந்த நிலையில், தொடா்ந்து 4-ஆவது நாளாக கம்பம், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் தேடிய நிலையில் வெள்ளிக்கிழமை சங்கரின் உடலை மீட்டனா். இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
