தீ விபத்தில் வீடு சேதம்

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடு சேதமடைந்தது.
Published on

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடு சேதமடைந்தது.

தேவதானபட்டி செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (46). இவா், வியாழக்கிழமை கடைக்குச் சென்றவிட்டு வீட்டுக்கு திரும்பினாராம்.

அப்போது, வீட்டில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுதொடா்பாக தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com