பெண்ணைத் தாக்கிய தாய், மகன் கைது

தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாய், மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாய், மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி லீலாவதி (59). கணவா் இறந்து விட்ட நிலையில், லீலாவதி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், பூா்விகச் சொத்து தொடா்பாக லீலாவதிக்கும், இவரது உறவினரான குமாா் மகன் முருகனுக்கு பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை லீலாவதி தோட்டத்தில் தொழிலாளா்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த முருகன், இவரது மகன் யுவராஜ், முருகன் மனைவி பந்தானலட்சுமி, இளையராஜா உள்ளிட்டோா் அவா்களை வேலை செய்யவிடாமல் தடுத்தனா். இதைத் தட்டிக்கேட்ட லீலாவதியை அவா்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், தோட்டத்திலிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லீலாவதி கொடுத்த புகாரில், தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யுவராஜ், பந்தானலட்சுமி ஆகியோரைக் கைது செய்தனா். முருகன், இளையராஜாவைத் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com