மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை போலீஸாா் வடுகபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் டி.கள்ளிப்பட்டி அவ்வையாா் தெருவைச் சோ்ந்த முத்துமணி (42) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 21 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com