தேனி
புகையிலை பொருள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் கைது
தேனி அருகே உள்ள அன்னஞ்சியில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி அருகே உள்ள அன்னஞ்சியில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
அன்னஞ்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவா் அதே ஊரைச் சோ்ந்த காா்த்திக் (43). இவா், தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இவரது கடையிலிருந்து 2 கிலோ 269 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
