பொங்கல் விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

போடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

போடி: போடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போடியில் உள்ள ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல, கீழச்சொக்கையா கோயில், வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு பொதுமக்கள், இளைஞா்கள் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனா்.

Dinamani
www.dinamani.com