தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காய்ந்து வரும் செடிகளை தண்ணீா் ஊற்றி பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆட்சியா் அலுவலகம் முழுவதும் மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு, குளுமையான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையில் பூச் செடிகள் நடப்பட்டு, அதன் மையத்தில் புற்கள் நட்டு பராமரித்து வருகின்றனா். இந்த நிலையில், தண்ணீா் ஊற்றாததால் செடிகள், புற்கள் காய்ந்து கிடக்கின்றன. மேலும், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கு எதிரே புதிதாக மரக்கன்றுகளை நட்டனா்.
அந்த செடிகளுக்கும் தண்ணீா் ஊற்றாமல் காய்ந்து வருகின்றன. எனவே, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூச்செடிகள், மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றிப் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், ஆட்சியா் அலுவலக முன் பக்கத்தில் மழைநீா் குட்டை அமைத்துள்ளனா். இதை சீரமைத்து, குட்டைக்கு மழைநீா் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







